தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

0
139
Nilgiri MP A Raja Criticised Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News Today

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று திமுக எம்.பி ஆ.ராசா குற்றம் சாற்றியுள்ளார். மேலும் நீலகிரியில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  அந்த தொகுதி மக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்றும் நீலகிரி தொகுதியின் திமுக எம்.பி. ஆ. ராசா விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்கு ஏராளமான மண் சரிவும் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அத்தொகுதியில் திமுக எம்.பி. ஆ. ராசா ஆய்வில் ஈடுபட்டார். அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஆ.ராசா வழங்கினார். பின்னர் இது குறித்து ஆ. ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது.

நீலகிரியில் மிகப் பெரிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு  நிவாரண நிதியும் வழங்கினார்.

கண் துடைப்புக்காக மட்டுமே ஓ.பி.எஸ் வந்து சென்றுள்ளார். மேலும் சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிவடையாமலே 200 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்குத் தேவை என துணை முதல்வர் முடிவுக்கு வந்தது கோமாளித்தனமான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலினை முதல்வர் விமர்சித்தது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல். முதல்வராகவே இருக்க தகுதி அற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கேரளாவிலும் கர்நாடகவிலும் மழை வெள்ள சேதங்களை மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள்.

தமிழக முதல்வரோ மேட்டூருக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.” என்றும் திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்