Nimbu Juice Recipe in Tamil: இந்த வெயிலுக்கு ஈஸியான முறையில் நிம்பு சர்பத் செய்வது எப்படி?

0
252
#image_title

Nimbu Juice Recipe in Tamil: அடிக்கிற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்னவெல்லாமோ செய்து வெப்பத்தை தணித்து வருகிறோம். 100 டிகிரியையும் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. மக்களால் தாங்கி கொள்ள முடியாத இந்த வெயிலை கால்நடைகளாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த கோடைக்காலத்தில் எத்தனையோ பழச்சாறு தயார் செய்து குடித்து வருகிறோம். அந்த வகையில் வீட்டிலேயே சுலபமான முறையில், அதிலும் கேரளாவில் மிகவும் ஸ்பெஷலான நிம்பு சர்பத் (kerala special nimbu sarbath seivathu eppadi) செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சைப்பழம் – 1 (பெரியது)
  • நாட்டுச் சக்கரை – 6 டேபுள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1.5 தேக்கரண்டி
  • இஞ்சி – சிறிய துண்டு
  • புதினா – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் எலுமிச்சைப்பழத்தை எடுத்து அதனை சாறு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிழிந்து சாறு எடுத்த பிறகு அந்த எலுமிச்சை பழ தோலை காய்கறி துருவலில் வைத்து தோல் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
  • இப்போது ஒரு மிக்ஸி சாரில் எடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் துருவல், நாட்டுசக்கரை, துருவிய எலுமிச்சை பழ தோல், நீளவாக்கில் வெட்டிய இஞ்சி, ஒரு கால் கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அடித்து வைத்துள்ளதை ஒரு கிண்ணத்தில் மாற்றிய பிறகு, அதில் தேவையான அளவு குளிர்ந்த நீர், ஐஸ் கட்டி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து அதில் கழுவி வைத்துள்ள இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை போட்டால் ஈஸியான முறையில் சுவையான கேரளா ஸ்பெஷல் நிம்பு ஜுஸ் (Nimbu Pani Recipe in Tamil) தயார்.

மேலும் படிக்க: உறை மோர் இல்லையா? இனி சுலபமாக வீட்டிலேயே தயிர் தயார் செய்யலாம்..!