நிரவ் மோடிக்கு தற்கொலை செய்து கொள்ளுவதைப் தவிர வேறு வழியில்லை

0
113

நிரவ் மோடி மீது ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி  மீது வழக்கு தொடரப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
2-வது நாளான நேற்று, நிரவ் மோடி தரப்பு வக்கீல் கிளாரி மோன்ட்கொமேரி தனது வாதத்தை தொடங்கினார். இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட மறுக்கிறார்கள். அவர் அங்கு வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார்.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டால், அங்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. மருத்துவ வசதி கிடைக்காமல், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சிறையில் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார் என்ற இந்திய அரசின் வாக்குறுதியும், சிறை வீடியோவும் போதுமானது அல்ல. ஏனென்றால், நிரவ் மோடியின் மனநிலையையும், கொரோனா அச்சுறுத்தலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்தர் ரோடு ஜெயிலில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிட்டார்.