Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவு.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி இவரது உறவினர் மெகுல் சோக்சி இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தது கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆனால் அதற்கு முன்னதாகவே இருவரும் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர் இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்த வழக்கு இந்த நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த மோடி கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்டார் லண்டன் சிறையில் உள்ள அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.


அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடியை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மும்பையில் உள்ள சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நீதிபதி நீரவ் மோடியை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.

Exit mobile version