Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தண்டனையில் இருந்து தப்பிக்க தன்னைத் தானே காயபடுத்திக் கொண்ட குற்றவாளி ! நிர்பயா வழக்கில் புது திருப்பம் !

தண்டனையில் இருந்து தப்பிக்க தன்னைத் தானே காயபடுத்திக் கொண்ட குற்றவாளி ! நிர்பயா வழக்கில் புது திருப்பம் !

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து இதற்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்போது குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டிருந்ததால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதனால் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் தாயார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதே வழக்கில் குற்றவாளிகளுக்குத் தனித்தனியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என மத்திய அரசு கோரியது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அனைவருக்கு ஒன்றாகதான் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக் கூறியது. இந்நிலையில் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் தேதி நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவுப் பிறப்பித்துள்ளது. ஆனால் தண்டனையை தள்ளிப் போகச் செய்ய குற்றவாளிகளில் ஒருவரான வினய் என்பவர்  சிறை சுவரில் தலையை மோதி தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டப்படி தேதி மாற்றப்படுமா அல்லது மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version