Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி இருக்கின்றது.

இந்தியா மட்டுமே அரசியலமைப்பின் முக்கியமான அம்சங்களை இழக்காமல் திருத்தங்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. நேரு ஆட்சிக்காலத்தில் திருத்தங்கள் கொண்டு வந்த சட்டங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தனார். பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் அரசு அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்ததா? அதன் பிறகு காங்கிரஸ் அரசியல் அமைப்பு சட்டத்தில் நிறைய திருத்தங்களை கொண்டு வந்தது.

அவசரநிலை காலத்தில் 42-வது சட்ட திருத்தம் போட்டு வரப்பட்டது. லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் எதிர்கட்சிகளே இல்லாத சூழலில் அந்த திருத்தம் செய்யப்பட்டது. குடும்ப நன்மைகளுக்காக மட்டுமே காங்கிரஸ் அரசியல் அமைப்பில் தொடர்ந்து திருத்தங்களை கொண்டு வந்தது.  அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சி இப்போது அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி போராடுகிறது. 1975-ல் இந்திரா அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அதற்கான விலையை அடுத்த தேர்தலில் கொடுத்தார் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

Exit mobile version