Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈக்வடாரில் தான் உள்ளாரா நித்தியானந்தா?


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.


ஆனால் நித்யானந்தாவின் அடைக்கலம் கோரிக்கையை மறுத்துவிட்டதாக ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் “மறைமுகமாக ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version