நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

0
202

நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

பெங்களூருவில் பிடதி ஆசிரமம் அமைத்து மக்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்தவர் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகளை வசியப் படுத்துதல், பணம் நகைகளை அபகரிப்பது போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இதுபோல பல்வேறு சர்ச்சைகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.

சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது நித்தியானந்தா ஒரு தீவையே விலைக்கு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

அதன்படி தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாட்டின் தனிக்கொடி, இலட்சினை, பாஸ்போர்ட் போன்றவற்றை தயார் செய்து விட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு அங்குள்ள அரசு அதிகாரிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நித்தியானந்தா இணையத்தில் தோன்றி தன்னை யாராலும் அழித்துவிட முடியாது என நேரலையில் தனது ஆதரவாளர்கள்/ பக்தர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.