நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

0
153
நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை!

வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா, நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நித்தியானந்தா இணையத்தில் தோன்றி தன்னை யாராலும் அழித்துவிட முடியாது என நேரலையில் தனது ஆதரவாளர்கள்/ பக்தர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

ஜனார்த்தனன் சர்மாவின் மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் டிசம்பர் 10ஆம் தேதி இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஜனார்த்தனன் சர்மாவின் இரு மகள்களும் நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளனர். அவர்களது வழக்கறிஞர் பிபி நாயக் இருவரையும் சமூக வலைதளங்கள் மூலம் தான் தொடர்புகொள்வதாகவும் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜனார்த்தனன் சர்மாவால் இருவருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வாயிலாக ஆஜராவதாக, விர்ஜினியாவில் இருந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் இரு பெண்களின் பிரமாணப் பத்திரத்தை ரத்து செய்ததோடு வரும் 19ஆம் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு குஜராத் போலீஸுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இவ்வழக்கில் தினசரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.