Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். அவருக்கு தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறனாலும் அழகான லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் தியானத்திலும் கலந்து கொண்ட அவர் பின்னர், அங்குள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு சென்றார்.

அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களை சந்தித்த அவர் அந்த மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்று கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Exit mobile version