Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நித்யானந்தாவின் கைலாச நாணயம் வெளியீடு : நாணயத்தின் அளவு தெரியுமா ?

நித்யானந்தாவின் கைலாச நாணயம் வெளியீடு : நாணயத்தின் அளவு தெரியுமா ?

பல்வேறு சர்ச்சைகள் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபகாலமாக தலைமறைவாக இருந்து யூடியூப் சேனல் மூலம் பேசுவது வழக்கமாக கொண்டிருந்தார். சமீப காலமாக நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி,ஒரு நாட்டை உருவாக்க மேற்கொண்டு வருவதாகவும் ,பேங்க் ஆப் கைலாச என்ற ஒரு வங்கியை தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகின.ரிசர்வு பேங்க் ஆப் கைலாசாவிற்கு நாணயங்களை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடுவதாக நித்யானந்தா கூறியதனை தொடர்ந்து இன்று நாணயத்தை வெளியிட்டனர்.

https://twitter.com/SriNithyananda/status/1297019950146686984?s=19
இந்த நாணயமானது ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ணா முத்ரா, புஷ்ப முத்ரா என்றும் பெயர் வைத்தார்.ஆனந்த நித்தியானந்தா தனது நாட்டு வர்த்தகத்தை இந்து மதத்தை பின்பற்றும் நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என்று புதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்யானந்தா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைலாசா லிமிடெட் என்ற ஒரு தனியார் நிறுவனத்தை ஹாங்காங்கின் உலக அளவில் நிதி மையத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஹாங்காங்கின் ஸ்டான்லி தெருவில் உள்ள ஒரு உலக அறக்கட்டளை கோபுரத்தின் முகவரியை கொடுக்கப்பட்டதாகவும் அதன்படி இன்று கைலாச நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version