‘அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க’!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!

0
124

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். மேலும், அவர் மல்டி லேயர் குவாரண்டின் மட்டுமே உங்களை காப்பாற்ற இயலும் என்றும், அனைவரும் கைலாச விற்கு இடம் பெறுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறிய நித்யானந்தா, தனது பாதம் பட்டால் கொரோனா இந்த நாட்டை விட்டு விலகிப் போகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கைலாசா என்ற தனிநாட்டிற்கு அதிபதியாகி உள்ள நித்யானந்தா என் நாடு என் மக்கள் என்று மிகவும் குஷியாக வாழ்ந்து வருகிறார். நித்யானந்தா தினசரி அவருடைய யூடியூப் சேனலில் ஏதாவது பேசி பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் யூடியூபில் பேசி உள்ள நித்யானந்தா, இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவது, கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்க்கும்போது மூன்றாம் அலையை அவர்கள் வரவேற்பது போல உள்ளது என்றும், மூன்றாவது அலை மிக மோசமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

டெல்டா பிளஸ் மற்றும் லேம்ப்டா போன்ற வைரஸ்கள் மிகவும் மோசமானவை. மேலும், அவர் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு அதிகமாக பாதித்து உள்ளது. இதன் காரணமாக சமூக உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் சமூக கட்டமைப்பு எதுவும் சரியாக இல்லை. தொற்றுநோய் தடுப்பதில் இந்திய உள்கட்டமைப்பு தோற்றுப்போய் உள்ளது. மேலும், குடும்பத்தோட அவர்கள் ஷாப்பிங் செய்கிறார்கள், கடைக்கு செல்கிறார்கள், தெருவில் கூட்டத்தை பார்த்தால் கொரோனாவே இறந்து விடும் போல உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் ஒரு கொரோனா மூன்றாம் அலை தாக்கப் போகிறது என்று கூறிய அவர், பல வேரியண்ட்கள் உருவாகி விட்டன. மேலும், மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார். எனவே மல்டி லேயர் குவாரன்டைன் மட்டுமே உங்களை காக்கும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று நான் சொல்கிறேன். அதனை தொடர்ந்து மல்டி லேயர் குவாரண்டின் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது நேரா கிளம்பி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் மல்டி லேயர் குவாரன்டைன் உள்ளது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் நான் எனது பக்தர்களுக்கும், பிரம்மசாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் சொல்கிறேன். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். தனிமையில் இருந்தால்தான் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மிகவும் நல்லது. நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.