Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவர் நான்காவது முறையாக பீகார் முதலமைச்சர் ஆகிறார். பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். அப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் அவர்கள், அனைத்து எம்எல்ஏக்கள் சார்பில் ஒருமனதாக முதலமைச்சராய் தேர்வு செய்யப்பட்டார்.

மேற்படி இன்னும் நிகழ்ச்சி பாட்னாவில் நிகழ்ந்துள்ளது அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது இன்று மாலை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக கட்சியை சேர்ந்த டர்கிசோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாய்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு முறை துணை முதலமைச்சராக பணிபுரிந்த சுஷில் மோடி மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.

Exit mobile version