Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

NLC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.22,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

NLC Vacancies!! Apply now to get salary of Rs.22,000 per month!!

NLC Vacancies!! Apply now to get salary of Rs.22,000 per month!!

நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-இல் காலியாக உள்ள 56 Industrial Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதி,ஊதியம்,தேர்வு முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: NLC இந்திய லிமிடெட்

பணி: Industrial Trainee

காலிப்பணியிடங்கள்: Industrial Trainee பணிக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: நெய்வேலி

விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் 10

வயது வரம்பு:

Industrial Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 28க்குள் இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசு அங்கிகரித்த கல்லூரியில் CA அல்லது CMA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Industrial Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்: Industrial Trainee பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் www.nlcindia.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version