இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

0
366
#image_title

சென்னை வரவேண்டும் என்றால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால் தான் தென் மாவட்ட காரங்களுக்கு தெரியும்.

 

 அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு வந்து அதற்கு அப்புறம் எங்கு போக வேண்டுமோ அங்கு செல்வார்கள்.

 

 ஆனால் இப்பொழுது மாபெரும் பொருட்செலவில்  400 கோடி  செலவில் கிலம்பக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது நாளையிலிருந்து அந்த பகுதியில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு சொல்லாது என்னும் தெரிவித்துள்ளது.

 

நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்ததிலிருந்து இன்றிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

 

மேலும் பல நவீன வசதிகளுடன் அந்த பேருந்து நிலையம்  88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 இல் புதிய பேருந்து நிலையம் கட்ட தொடங்கியது.

 

இதனால் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் வெகு விரைவில் சென்று விடும் என்று சொல்லப்படுகிறது.

 

கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடுக்கு 5 நிமிடத்திற்கு 1 பேருந்தும், தாம்பரத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னைக்குள் நீங்க எந்த ஏரியாவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சுலபமாக செல்லலாம்.

 

விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்குகிறது. பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இப்பேருந்துகள் புறப்படும்.