Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! 

No caste certificate required to join! Notice issued by the District Collector!

No caste certificate required to join! Notice issued by the District Collector!

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
தேனி மாவட்டத்தில் பி.வ / மிபிவ / சீம/ க.சீ மற்றும் சிபா நல மாணவர் மற்றும்
மாணவியர்களுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, 16 பள்ளி மாணவர்
விடுதிகள், 8 மாணவியர் விடுதிகள் மற்றும் 3 கல்லூரி மாணவர் விடுதிகள், 3 மாணவியர் விடுதிகள்செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும் கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் / ஐடிஐ படிப்புகளில்பயிலும் மாணவர்/ மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிவ/மிபிவ/சீம விடுதிகளில்அனைத்து வகுப்பை சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
(முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் மற்றும் குழந்தை தொழிலர்களுக்கு எவ்வித நிபந்தனை இல்லாமல் விடுதிகளில் தங்கி பயில அனுமதிக்கப்படும்)
அனைத்து விடுதி மாணவர்/மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும், 10ம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்/ மாணவியருக்கு சீருடைகள், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும்
மாணவர்/ மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் இயங்கும்
விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.( விண்ணப்பிக்கும் பொழுது (அ) சேரும் பொழுது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்)
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ க்கு மேல்
இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ/ மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் /
காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ / இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளினியிடம் அல்லது  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2022 க்குள்ளும் ,கல்லுாரி விடுதிகளை பொறுத்தவரை 31.07.2022 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு கேரள மாநிலத் தோட்டங்களில் பணி புரியும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையோர பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் இடமளிக்க அவ்விடுதிகளுக்கு கூறிய எண்ணிக்கைக்கு மிகாமல் சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறான  நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு அவர்களின் சுய உறுதிச் சான்றின் அடிப்படையில்,விடுதியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கலாம். எனவே, மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Exit mobile version