கடந்த 2019 ஆம் வருடத்தில் உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது கொரோனா பரவல், இந்த நோய்த்தொற்று பரவலுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனா. அந்த சீனாவின் வூகான் நகரிலிருந்து தான் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியது.
முதலில் சீனாவை மட்டும் பாதித்து வந்த இந்த நோய்த்தொற்று பரவல் பிறகு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கும் இந்த நோய் தொற்று வந்து சேர்ந்தது.
ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நேர்மையான ஊரடங்கு உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
மேலும் இந்த நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வந்தனர். அதன் பலனாக இதற்கு எதிரான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது.அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த தடுப்பூசியின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் தற்போது மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நேற்று புதிதாக 17,186 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் ஆண்கள், பெண்கள், என்று இருபாலரையும் சேர்த்து 28 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 10 பேர் உட்பட 10 மாவட்டங்களில் மட்டுமே நோய் தொற்று பதிவாகியுள்ளது. 28 மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அறவே இல்லை என சொல்லப்படுகிறது.
12 வயதிற்கு உட்பட்ட 6 குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8பேர் உள்ளிட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு 12 மாவட்டங்கள் நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்களாக இருந்து வருகின்றன. இதுவரையில் 34,53,112 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 25வது நாளாக நேற்று நோய் தொற்றால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இதுவரையில் 38,025 பேர் நோய் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள். அதோடு நேற்றைய நிலவரத்தினடிப்படையில், 229 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 21 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு 27 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியிருக்கிறார்கள். இதுவரையில் தமிழ்நாட்டில் 34,14,858 பேர் பூரணமாக இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.