தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக இருந்த வழக்கத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்று இருந்தாலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எப்போதும்போல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அதாவது சென்ற 50 வருட காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் எப்பொழுதுமே மத்திய அரசு என்று தான் தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் வெளியிடும் எல்லா அறிக்கையிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தெரிவித்து வருகின்றார்.
இதனை அடுத்து எல்லா திமுக அமைச்சர்களும் மற்றும் சட்டசபை உறுப்பினர்களும், அதோடு திமுகவைச் சார்ந்தவர்களும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தெரிவித்து வருகிறார்கள். அதோடு பல அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசு என்று குறிப்பிட தொடங்கியிருக்கின்றன.
அதே சமயத்தில் ஒன்றிய அரசு என்ற சொல் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரும் நடிகையுமான குஷ்பு இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள்தான் துரதிஷ்டவசமாக 50 வருடங்களுக்கு மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை இருந்துவருகிறது. தமிழகத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் நாம் பாரதப் பேரரசு என்று அழைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான் வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என்று தெரிவித்திருக்கின்றார் நடிகை குஷ்பு