PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் நியமிக்கப்பட்டதில் மாற்றம் இல்லை ராமதாஸ் அறிவிப்பு!!
கடந்த டிசம்பர்-28 ஆம் தேதி 2025 புத்தாண்டை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.
அதானி வழக்கு சிபிசிஐடி மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10,5 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அன்புமணி பாமக தலைவர் ஆன பிறகு அவர் வகித்த பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் பதவி பாமகவில் காலியாக இருந்தது.
எனவே, ஜி.கே மணி அவர்களின் மகன் தமிழ் குமரன் பாமகவின் இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் தான் அப் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில், தன் மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை பாமக கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து பேசினார் அன்புமணி.
மேலும், புதிய பனையூரில் புதிய கட்சி அலுவலகம் திறந்து வைத்து இருக்கிறேன் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வந்து சந்தியுங்கள் எனக் கூறி இருந்தார். மாநில இளைஞர் அணித் தலைவர் பதவி நியமிப்பதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்பு மணி இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் மாநில இளைஞர் அணித் தலைவராக நியமித்து விட்டேன் அதில் எந்த மாற்றமும் இல்லை. என் மேல் தவறு இருந்தால் விமர்சனம் செய்யுங்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.