மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்! ஜெகன் மோகன் ரெட்டி பதிவு!
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மின்னணு இயந்திரங்கள் இனி. வாக்குப் பதிவுக்கு வேண்டாம் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு இயந்திரங்கள் பற்றி பல்வேறு புகர்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய பேச்சுக்கள் அதிகமாகி இருக்கின்றது.
இதையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி போட்ட பதிவு தற்பொழுது பேசும் பொருளாக மாறி இருக்கின்றது. தற்பொழுது அனைவரும் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி பேசத் தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் “நீதி வழங்கப்படுவது மட்டுமில்லாமல் நீதி வழங்கப்பட்டதாக தோன்ற வைக்க வேண்டும். ஜனநாயகம் மேலோங்குவது மட்டுமால்லாமல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடைமுறையில் இருப்பதாகவும் தோன்ற வேண்டும்.
உலகம் முழுவதும் தேர்தல் நடைபெறுகின்றது. அந்த தேர்தல் சமயங்களில் அனைத்து ஜனநாயக நாட்டிலும் காகித வாக்குச்சீட்டுக்கள் மூலமாகத்தான் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அங்கு எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது இல்லை.
நம்முடைய ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த வேண்டும் என்றால் நாமும் அதை நோக்கி முன்னேற வேண்டும். இவிஎம் என்று அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக காகித வாக்குச்சீட்டு முறையை மீண்டும் இந்திய தேர்தலில் கொண்டு வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.