Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு !

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு !

நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு தொடக்க விழாவில் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கை  50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை முன்னிட்டு தற்போதைய நிர்வாகம் அதை இன்று மாலை கொண்டாட முடிவு செய்துள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. பொன்விழா மலரின் முதல் பிரதியை பெற்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்

இந்த விழாவிற்கான அழைப்பிதழில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு ஒன்று சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.  இன்று மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு விழா பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் முதல் குறிப்பாக விழாவில் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்துரை ஒளிபரப்பப்படும் என்றும், மாலை ஐந்து முப்பது மணிக்கு மறைந்த சோ அவர்களின் முந்தைய ஆண்டு விழா பேச்சிலிருந்து சில பகுதிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குறிப்பாக விழாவிற்கு வருபவர்கள் கறுப்பு உடையுடன் வரக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல விழாவிற்கான அழைப்பிதழ் அறிவில்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிந்து வந்த சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version