Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலை நேர்காணல் மட்டும்தான்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் அதிகமாக தேவைப்படுவதால் மருத்துவர்களின் பணிக்கு காலி பணி இடங்களை அறிவித்துள்ளது அரியலூர் மருத்துவமனை.

 

அங்கு அதிகமாக காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமும் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

கல்வி தகுதியாக அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக 60,000 வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

அனைவரும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார். காலி பணியிடங்கள் நிரப்பும் வரை நேர்காணல் நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.

 

அம்மருத்துவமணையில் இன்னும் காலியிடங்கள் நிரம்பாததினால், விரைவாக நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version