உடற்பயிற்சியே வேண்டாம்!! உடல் எடை தானாகவே கடகடன்னு குறைய இந்த பானம் குடிங்க!!

Photo of author

By Divya

நம் தினசரி உணவில் ராகியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தானியமாக இந்த ராகி இருந்தது.ஆனால் காலப்போக்கில் மக்கள் அரிசி உணவிற்கு மாறிவிட்டதால் ராகியின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிட்டது.

ராகி அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறு தானிய வகை ஆகும்.கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு என்று எண்ணற்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.ராகியை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு – ஒரு தேக்கரண்டி
2)சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4)இஞ்சி – ஒரு பின்ச்
5)பூண்டு பல் – இரண்டு
6)வெங்காயம் – இரண்டு
7)உப்பு – தேவையான அளவு
8)மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி
9)சோள மாவு – ஒரு தேக்கரண்டி
10)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பூண்டு,இஞ்சி மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் அரை கப் தண்ணீர் ஊற்றவும்.இரண்டு நிமிடங்கள் கழித்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கரைத்து வைத்துள்ள ராகி மாவை ஊற்றி கலந்துவிட வேண்டும்.அடுத்து சீரகத் தூள்,மிளகுத் தூள்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ராகி மாவு கெட்டி படாமல் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு சோள மாவை கரைத்து அதில் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்துவிட்டு பருக வேண்டும்.இந்த ராகி சூப் உடல் எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.எலும்புகள் வலிமை பெற ராகி சூப் செய்து பருகலாம்.கால்சியம் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த பானம் சிறந்த தீர்வாகும்.

Exit mobile version