Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!!

#image_title

முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!!

அதிகப்படியான மன அழுத்தம்,வேலைப்பளு ஆகியவற்றால் பலருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் தான் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படுகிறது. சிலருக்கு குழந்தை பருவத்திலே முன் நெற்றி முடி இருக்காது.சிலருக்கு இளம் வயது மற்றும் வயது முதுமையால் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படும்.

ஆனால் இந்த முன் நெற்றி முடி உதிர்வை யாரும் கண்டு கொள்வதில்லை.தனி அக்கறை செலுத்துவது இல்லை.முன் நெற்றி முடி உதிர்வை கட்டுப்படுத்தி இழந்த முடியை வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)சின்ன வெங்காயம்
3)வெந்தயம்

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 3 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 5 நசுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து காய்ச்சி ஆற விடவும். இதை தினமும் முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி வளரத் தொடங்கும்.

Exit mobile version