முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தொற்றானது வருடத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். மக்களும் ஒவ்வொரு முறை தொற்று பாதிப்பு ஏற்படும் போதும் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது தான் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்பை தந்து சற்று குறைய ஆரம்பித்தது. அது முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் உள்ளேயே அதன் உரு மாற்றமாக ஒமைக்ரான் பரவ ஆரம்பித்துவிட்டது.
இந்த ஒமைக்ரான் தொற்றானது இரண்டாம் அலையை விட 50 மடங்கு அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. சென்றமுறை போல் மக்கள் பாதிப்பை சந்திக்காமல் இருக்க அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர். அந்த வரிசையில் டெல்லி ,ஹரியானா, மணிப்பூர் ,மகாராஷ்டிரா, தமிழ்நாடு , உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. சில மாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கையும் அமல் படுத்தி உள்ளனர்.
குறிப்பாக டெல்லியில் சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பபூசி செலுத்தி வருகின்றனர். அதனால் முடிந்தவரை தொற்று பரவாமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி இரவு ஊரடங்கும் தற்போது அமலில் உள்ளது. அதனால் டெல்லிக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த தேவை இருக்காது என இவ்வாறு கூறினார். இதன் மூலம் நாளடைவில் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு மட்டுமே நிலவும் எனவும் முழு ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என பேசி வருகின்றனர்.