Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமதாஸ் போட்ட அதிரடி ட்வீட்! மெர்சலான அதிமுக!

அதிமுக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் வெளியேறிவிட்டது. தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற பதிலில் அவர் தெரிவித்திருப்பதாவது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற 2019 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆரம்பித்த அதிமுக பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வரையில் நீடித்தது நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் நீடித்தது. சென்ற தேர்தலில் கணிசமான அளவில் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், அதோடு மட்டுமல்லாமல் ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியது.

இவ்வாறான சூழ்நிலையில், விரைவில் நடைபெறவிருக்கும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி நீடிக்கும் என்று தான் எல்லோராலும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை அன்று அதிமுக கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுகிறது என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜிகே மணி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் மறுநாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மணி நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுகிறோம் எனவும் விளக்கம் கொடுத்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணியின் இந்த விளக்கத்திற்கு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மீதான விமர்சனத்தை அதிமுக நிறுத்திக் கொண்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த சமயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியை விரும்புவதாகத் தெரிவித்து அந்த கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் என்பதையும் கடந்து நடை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அவர் தன்னுடைய வலைப்பதிவில் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை கிளப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இருக்கின்ற தன்னுடைய வலைதளப் பதிவில் லோகல் அண்டர்ஸ்டாண்டிங் என்று பதிவிட்டு அதனை அழித்து இருக்கின்றார். அதோடு அண்டர்ஸ்டாண்ட் புரிஞ்சுதா என பதிவிட்டு இருக்கிறார். அவருடைய பதிவு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவு என்பது அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் எடுத்த முடிவு புரிந்ததா என்ற விதத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அதிமுகவினர் மறுபடியும் கூட்டணிக்கு வாருங்கள் என ரகசியமாக அழைப்பு விடுப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. மீண்டும், மீண்டும் அழைக்க வேண்டாம் என்ற விதத்தில் இதனை பதிவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Exit mobile version