இனி லாரிகளில் இது கட்டாயம்! போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு!
லாரி உரிமையாளர்கள் பலவித கோரிக்கைகளை கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக,லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாராசாமி மற்றும் செயலாளர் வாங்கலி ஆகியோர் டிசம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக கூறினர்.அதன்பின் போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது.
அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யும்போதும், புதிய விதிகளை அமல்படுத்தும் போது அதனை விவாதித்து முடிவெடுக்க 8பேர் கொண்ட குழுவை அமைத்து நடைமுறை படுத்த வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், லாரிகளுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் தகுதிச்சான்று பெறும்போது ஒளிரும் பட்டை ஒட்டுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலவழக்கு தொடரப்பட்டு தீர்பளிக்காமல் இருந்தது.கடந்த மார்ச் 31- ஆம் தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். போக்குவரத்து ஆணையர், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, ஒருங்கிணைப்புக்குழுவில் கலந்தோசிக்காமல் கடந்த மார்ச் 27- ஆம் தேதி, லாரிகளில் அனைத்து பக்கவாட்டு பகுதிகளிலும் ஒளிரும் பட்டைகளை ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற உடன், போக்குவரத்துறை அமைச்சர் முதல்வருடன் ஒருங்கிணைப்புக்குழுவை உடனடியாக கூட்டி கலந்தோசித்து முடிவெடுக்க வேண்டும்.கர்நாடகா,ஆந்திரா போன்ற மாநிலங்களில் இவ்வாறு ஆணை நடைமுரையிள்ளததால் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு புதிய கோட்பாடுகள் நடைமுறைக்கு வருவது கூடாது என அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.