Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

#image_title

தண்ணீரில் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரும்!!! நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் இசை வெளியீட்டு விழாவிற்கு அரசு அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் இதில் அரசியல் உள்ளது என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேட்டியில் “நடிகர். விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. ஆனால் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ஏன்?

ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிகளை அரசு காரணமாக முன்வைக்கின்றது. ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி அளித்தது. ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காவல் துறை அனுமதி வழங்கியது போலவே நேரு உள் விளையாட்டு அரங்கிலும் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் நிகழ்ச்சிக்கு அனுமதி கெடுத்த அரசு ஏன் நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுக்க வில்லை. மக்கள் அதிகம் கூடி விடுவார்கள் என்ற அச்சம் அரசுக்கு இருந்தால் காவல் துறை எதற்கு உள்ளது.

அரசியல் மாநாடுகள் நடைபெறும் பொழுது அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூறுவார்கள் அப்பொழுது பாதுகாப்பு அளிப்பது காவல் துறைதான். அந்த காவல் துறை ஏன் இதற்கு பாதிப்பு அளிக்க முன்வர கூடாது.

கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதற்கு அரசு அனுமதி அளித்தது. நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை. ஒரு பந்தை தண்ணீரில் எவ்வளவு தான் பொத்தி வைத்தாலும் அது மேலே வரத்தான் செய்யும்” என்று நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

Exit mobile version