Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!!

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!!

தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில்
வில்லன்,ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்று வலம் வருகிறார்.அவ்வப்போது பாஜகவையும் பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை கூறி வரும் இவர் சந்திரயான்-3 விண்கலத்தை அவமதிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 அன்று புகைப்படம் ஒன்றை தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் உருவான சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை அடைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்கில் ஏவப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளை சந்திரயான்-3 , விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.இந்த நிகழ்வு மட்டும் சரியாக நடந்து முடியும் பட்சத்தில் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா தான் என்ற மிகப்பெரிய சாதனையை அடையும்.இதனிடையே அவ்வப்போது விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விக்ரம் லேண்டர் நிலவில் எடுத்த முதல் புகைப்படத்தில் ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் பொம்மை இடம் பெற்றிருந்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பிரகாஷ் ராஜ் சர்ச்சையில் சிக்கினார்.இவரின் இந்த பதிவு இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவான நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ள சந்திரயான்-3 விண்கலத்தை அவமதிக்கும் வகையில் இருக்கின்றது என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனது பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வந்த நெட்டிசன்களுக்கு விளக்கம் தரும் விதமாக எக்ஸ் தளத்தில் “வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன்.கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது.உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால். கொஞ்சம் வளருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க உள்ள சந்திரயான்-3 விண்கலத்தை அவமதித்து விட்டார் என்று பிரகாஷ் ராஜ் மீது இந்து அமைப்பினர் கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இதன் அடிப்படையில் காவல் துறையினர் பிரகாஷ் ராஜ் மீது புகார் பதித்துள்ளனர்.

Exit mobile version