Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!

No matter what the situation is in Erode district, the trip is in Parisil! The people of the area who are suffering!

No matter what the situation is in Erode district, the trip is in Parisil! The people of the area who are suffering!

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!

 ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த வனபகுதியில் கள்ளம்பாளையம்  அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றது. அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினம் தோறும் மாயாற்றை  பரிசலில் மூலம் தான்  கடந்து பவானிசாகர் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும்.

அங்கு  போக்குவரத்து வசதி  எதுவும் இல்லை. மேலும் நீலகிரி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும்கனமழையின்  காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளம்பாளையம்   பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் ஆபத்தை உணராமல் பரிசலில் பயணம் செய்கின்றனர். பரிசல்கள் தட்டு தடுமாறி வெள்ளத்தில் செல்கிறது அந்த பகுதியில்  தொங்கு பாலம் வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து வந்தனர் அப்பகுதி மக்கள்.

அங்குள்ள மக்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பகுதிகளில் தான் நாங்கள் வசித்து வருகின்றோம் ஆனால் மழைக்காலங்களில் மட்டும் மாயாற்றை கடப்பது கடினமாக இருந்து வருகிறது. இந்த திடீர் மழையின் காரணமாக மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் கூறுகின்றார்கள்.

மேலும் நாங்கள் பரிசலில் செல்லும்போது எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.பல ஆண்டுகாலமாக மாயாற்றில் தொங்கும் பலம் அமைத்தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தும் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அரசு உள்ளது எனவும் குற்றம் சாற்றி வருகின்றனர். எங்களது கோரிக்கையை விரைவாக நிறைவேற்றினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version