என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!!
நமது கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை பக்க வெறும் இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நமது கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை மறையச் செய்வதற்கு ஆரஞ்சு பழத்தின் பொடியை நாம் பயன்படுத்தவுள்ளோம். இந்த ஆரஞ்சு பொடி நாட்டு மருத்து கடைகளில் கிடைக்கும். அல்லது நாமே தயாரித்துக் கொள்ளலாம். அதெல்லாம் எவ்வாறு என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது சருமத்தை பாதுகாக்கும். மேலும் உடலுக்கும் பலத்தை அளிக்கும். நாம் ஆரஞ்சு பழத்தை வைத்து கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை மறையச் செய்யலாம். அது எவ்வாறு என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்…
* ஆரஞ்சு பொடி
* ரோஸ் வாட்டர்
செய்முறை…
நாம் முதலில் ஆரஞ்சுப் பொடியை தயார். செய்ய வேண்டும். முதலில் ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் வைத்து உயர்த்த வேண்டும். அதன் பின்னர் இதை மிக்சியில் அரைத்து படியாக தயார் செய்யலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் ஆரஞ்சு பொடி கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
எனவே தேவையான அளவு ஆரஞ்சு பொடியை எடுத்து ஒரு சிறிய பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை நம் கழுத்தில் கருமை உள்ள இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு இதை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நீங்கும்.