Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன செய்தாலும் தலையில் உள்ள பேன் போகவில்லையா!! இந்த ஒரு பொருள் போதும் பேனை முற்றிலும் அழித்து விடலாம்!!

No matter what you do, the head lice won't go away!! This one product is enough to kill lice completely!!

No matter what you do, the head lice won't go away!! This one product is enough to kill lice completely!!

என்ன செய்தாலும் தலையில் உள்ள பேன் போகவில்லையா!! இந்த ஒரு பொருள் போதும் பேனை முற்றிலும் அழித்து விடலாம்!!

எல்லாருக்கும் தலையில் இருக்கும் பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனை தலையில் பேன் இருப்பது தான். பேன் நம் தலையை விட்டு நீக்க என்னதான் நிறைய சிகிச்சைகளை எடுத்திருந்தாலும் பேன் தற்காலிகமாக நீங்கி மீண்டும் வந்திருக்கும்.

இந்த பேன் தலையில் இருப்பதால் தலையில் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு ஏற்படும் பொழுது நாமும் இந்த அரிப்பை சரி செய்ய கைகளை வைத்து சொரிவோம். இதானால் தலையில் புண்கள் ஏற்படும். மேலும் பொடுகுத் தொல்லை ஏற்படும். இந்த பொடுகுத் தொல்லையால் தலை முடி உதிர்தல் பிரச்சனையும் வரும். இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஒரே ஒரு பொருள் மட்டும் போதும். அந்த ஒரு பொருள் என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேன் தொல்லையை நீக்க நாம் பயன்படுத்தக் கூடிய அந்த ஒரு பொருள் வசம்பு ஆகும். வசம்பை வைத்து நாம் பல நோய்களை குணமாக்கலாம். இந்த வசம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வசம்பை வைத்து நாம் இருமலை குணமாக்கலாம். வயிற்று உப்புசத்தை சரி செய்யலாம். கிருமி நாசினாயக பயன்படுத்தலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த வசம்பை வைத்து எவ்வாறு பேனை தலையில் இருந்து நீக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

வசம்பை வைத்து பேனை நீக்கும் செயல்முறை…

முதலில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பை வாங்கிக் கொள்ளவும். பிறகு இந்த வசம்பை எடுத்து தண்ணீரில் குழைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை தலையில் தேய்த்துக் கொள்ளவும். அரை மணி நேரம் அதாவது 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலையை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் தலையில் இருக்கும் பேன் முற்றிலும் நீங்கும். மேலும் தலையில் இருக்கும் பொடுகும் முற்றிலுமாக நீங்கி விடும்.

வசம்பின் மற்ற நன்மைகள்…

* இந்த வசம்பை வைத்து இருமல், வாய் துர்நாற்றம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுதத்லாம்.

* இந்த வசம்பை தூளாக்கி காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டினால் காயம் ஆறிவிடும்.

* இந்த வசம்பை முதலில் சுட்டு தூளாக்க வேண்டும். பின்னர் இந்த வசம்பு தூளை சுக்குத் தூளுடன் கலந்து அதை வயிற்றில் தடவினால் வயிறு உப்புசம் குறையும்.

 

Exit mobile version