Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார்.

அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக பதவி ஏற்க்கப்படுவார் .ஊரோடு சேர்ந்து ஒத்து வாழ பன்னீர்செல்வம் நன்றாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் கட்சி வருவதை அவர் துணையாக நிற்க வேண்டும்.

அவர் மீது ஒட்டு மொத்த தொண்டர்களும் வெறுப்பில் உள்ளனர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு எதிரான முழக்கத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதனால் பன்னீர்செல்வத்திற்கு மன வேதனையும் ஏற்பட வில்லை. பன்னீர்செல்வத்தினால்  தான் தொண்டர்கள் அனைவரும் மன வேதனையில் உள்ளார்கள். அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசப்பட்டதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்து தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜாக கட்சியினர் தலையிடவில்லை.அப்படி ஒரே வேளை தலையிட்டாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் அமைதியாக பொறுத்திருக்கவும் மாட்டோம். மு.க ஸ்டாலின் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அ.தி.மு.கவை என்றுமே அழிக்க முடியாது. அதிமுக ஆட்சியை அழிக்க இனியும் ஒருவன் பிறக்க மாட்டான்.

இனி எவனும் பிறக்க போவதும் இல்லை. அப்படி ஒரு வேளை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து தான் போவார்கள்.அதிமுகவை அழிக்க, அழகிரியை மனதில் வைத்து தான் ஸ்டாலின் அடிக்கடி கருத்து தெரிவித்துள்ளார் என்று ஜெயக்குமார் கூறியிருந்தார்.மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பட்டாபிஷேகம் நடப்பது உறுதி என கூறினார்.

Exit mobile version