இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லையா? அவர் மகனே அளித்த விளக்கம்

0
179
No money even for director Bharathiraja's medical expenses? Explanation given by his son

இயக்குனர் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லையா? அவர் மகனே அளித்த விளக்கம்

தமிழில் பிரபல இயக்குனரான பாரதிராஜா உடல் நலவு குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அமைந்தகரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு இதற்கான சிகிச்சையும் அங்கு அளிக்க்கபட்டுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை ஓரளவு சரியனதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மருத்துவ செலவிற்கே பணம் இல்லை என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்த அவரது மகன் மனோஜ், இந்த தகவல் முற்றிலும் தவறானது. மேலும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம், அவருக்கு எங்களுடைய சொந்த பணத்தில் தான் சிகிச்சை அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பற்றி பரவிய இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.