மாதத்திற்கு இனி 6 நாட்கள் இல்லை 8 நாட்கள்!! வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0
103
No more 6 days per month but 8 days!! Good news for bank employees!!

அங்கே ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்ட வந்த நிலையில், மாதத்திற்கு மொத்தம் 6 நாட்கள் என்ற விடுமுறை கணக்கு இருந்து வந்தது. இதில் தற்பொழுது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை பெறுவதற்கு, மற்ற நாட்களில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அதாவது, வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் திறந்திருக்கும். அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்தியன் வங்கிகள் சங்கமும் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதன் பேரில் இனி அங்கே ஊழியர்களுக்கு மாதாந்திர விடுமுறையானது 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக உயரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வேலை நேரமானது காலை 9:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும். இப்போது வங்கிகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.