இனி ஆல் அவுட் கொசுவர்த்தி தேவையில்லை!! இதை மட்டும் செய்யுங்கள் உங்களது வீட்டில் 1 கொசு கூட வராது!! 

0
1152
No more all out mosquito repellent!! Just do this and you won't get even 1 mosquito in your house!!

இனி ஆல் அவுட் கொசுவர்த்தி தேவையில்லை!! இதை மட்டும் செய்யுங்கள் உங்களது வீட்டில் 1 கொசு கூட வராது!!

இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டி அடிக்கும் ஸ்ப்ரே!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

தற்பொழுது கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டது.இந்த பருவ காலத்தில் டெங்கு,மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவக் கூடிய வியாதிகள் அதிகளவு பரவும்.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கடுமையான காய்ச்சலுக்கு ஆளாவார்கள்.

மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.அதில் கொசுக்கள் முட்டையிட்டு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்து மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.

கடுமையான காய்ச்சல்,உடல் வலி,மூட்டு வலி,தலைவலி,வாந்தி,குமட்டல் போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

இல்லத்தை சுற்றி தண்ணீர் இருந்தால் அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.நீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.சிலர் கொசுக்களை விரட்ட இரசாயனம் நிறைந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்க செய்துவிடும்.எனவே இயற்கையான கொசுவிரட்டியை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகுக்கீரை எண்ணெய்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மிளகு கீரை எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் வருவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)லாவெண்டர் எண்ணெய்
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஸ்ப்ரே பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி லாவண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் வருவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)யூகலிப்டஸ் எண்ணெய்

செய்முறை:-

ஸ்ப்ரே பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் வருவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சைடர் வினிகர்
2)தண்ணீர்
3)மிளகுக்கீரை எண்ணெய்

செய்முறை:-

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 150 மில்லி தண்ணீர் ஊற்றிக் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு கீரை எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் வருவது தடுக்கப்படும்.