இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !!
அழகு நிலையங்கள் நடத்தக் கூடாது என தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து உள்ளது.
அங்கு பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை இல்லை. அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடாது. அடுத்து என்.ஜி.ஓ -வில் பணிபுரிய தடை மற்றும் பூங்கா, சினிமா, மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடை என அடுக்கடுக்காக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காபூல் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தலிபான் அரசின் புதிய உத்தரவின் படி பெண்கள் அழகு நிலைய உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக ஏராளமான பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆண்கள் அங்கு வேலை இன்றி தவிக்கும் சூழ்நிலையில் அவர்கள் வீட்டு சுமையை பெண்கள் ஏற்க அழகு நிலையங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது அதற்கு தடை விதித்தால் என்ன செய்வது என பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அங்கு தொடர்ந்து பெண்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது தலிபான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது விதிக்கும் கட்டுபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்ப்பை கிளப்பி வருகிறது.
ஆண்களுக்கு வேலை இருந்தால் பரவாயில்லை. நாங்கள் வீட்டினை விட்டு வெளியே வர மாட்டோம். இப்போது தடை விதித்தால் நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?? என தனது ஆதங்கத்தை மேக்கப் கலைஞர் ஒருவர் கொட்டி தீர்த்தார்.
தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது இஸ்லாம் நாட்டினை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். என காபூல் வாசி ஒருவர் கூறினார்.