Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இவற்றிற்கும் இடம் ஒதுக்கீடு! மாணவர்களுக்கு இன்பச்செய்தி!

no-more-booking-for-these-good-news-for-students

no-more-booking-for-these-good-news-for-students

இனி இவற்றிற்கும் இடம் ஒதுக்கீடு! மாணவர்களுக்கு இன்பச்செய்தி!

கொரோனா தொற்றானது 2019 ஆண்டு ஆரம்பித்தது. இன்றளவும் கட்டுக்குள் அடங்காமல் மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. கொரோனா தொற்றானது சற்று அதிகரிக்க ஆரம்பித்ததால் மக்கள் நலன் கருதி அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.முழு ஊரடங்கினால் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் அதிகப் படியாக கொரோனா பரவும் வாய்புகள் உள்ளதால் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தாமதம் ஆகிவருகிறது.அதனால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படமால் ஆள் பாஸ் செய்வது இதுவே முதல் முறையாகும்.

அவ்வாறு செய்யப்பட்டு தற்போது மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளனர். தற்போது கல்லூரி சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர்க்கும் போது 75% இடம் ஒதுக்கீடு தந்துள்ளனர். அந்தவகையில் மற்ற தொழிற் படிப்புகளான பொறியியல்,சட்டம்,வேளாண்மை,கால்நடை ஆகிய பிரிவுகளில் பயிலும் அரசு பள்ளி மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கையை கணக்கிடக்கோரி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓர் குழுவை நியமித்தார். அக்குழுவானது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் இந்த கணக்கீட்டை காண முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு மாத காலமே அவகாசம் தந்திருந்தார். இந்த நிலையில் அந்த கால அவகாசம் வரும் 18 ஆம் தேதிக்குள் முடிய உள்ளத்தால் முருகேசன் அவர்கள் அந்த தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார்.அந்த அறிக்கை தாக்கல் மூலம் மீதமுள்ள பிரிவுகளுக்கும் அரசு பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு ஒதுக்கீடு கிடைக்குமா என்பது தெரியவரும்.

Exit mobile version