Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!

no-more-consumer-cards-these-charges-should-be-paid-in-the-first-mode-only

no-more-consumer-cards-these-charges-should-be-paid-in-the-first-mode-only

இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று  வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையை  ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் அடுத்த மாதம் முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது.

மேலும் முன்னதாகவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது. நுகர்வோர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது 2020 ஆம் ஆண்டின் 2௦20-21 முதல் 2௦24-25 வரையிலான காலகட்டத்திற்கு அனைத்தும் நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணை அமைப்பிற்கு ஏற்ப மேம்படுத்தி உள்ளது.

இந்த இணையவலையிலான கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்  கியூஆர்   குறியீடு மூலம் பி ஓ எஸ் போன்ற பிற கட்டண முறைகளை பயன்படுத்தியும் நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநிறகற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்தும்  வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் பயன்படுத்தி முறையாக கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version