இனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!

0
87

இனி வீட்டு வாசலிலேயே மின்சார நுகர்வு கட்டணத்தை வசூலிக்கும் புதிய திட்டத்தை தமிழக மின்சார வாரியம் விரைவில் அறிமுகப்படுத்தயுள்ளது.

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின் கட்டண மையங்களில், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், மொபைல் செயலி உள்ளிட்ட முறைகளின் மூலம் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் “பாயின் ஆப் சேல்” என்ற டிஜிட்டல் வாயிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக நுகர்வு கட்டணத்தை வீட்டு வாசலிலேயே செலுத்தும் முறையை செயல்படுத்த உள்ளதாக மின்வாரிய துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மீட்டரில் கணக்கெடுத்த நாளன்றே, வீட்டு வாசலிலேயே நாட்கள் மின் நுகர்வுகட்டணத்தை செலுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் மின்சாரத்தை எளிதில் கட்ட இயலும் வகையில் இந்த வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ,மின் கட்டணத்தை வசூலிக்க ‘பாயிண்ட் ஆஃப் சேல் ‘ என்ற டிஜிட்டல் பணம் செலுத்தும் கருவி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.மின் பயன்பாடு கணக்கெடுத்து, அன்றே மின் நுகர்வு தெரிவிக்கும் போது ,பணம் செலுத்த விரும்புவோர் உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்றும் இது தவிர கியூ ஆர் கோட் என்ற ரகசிய குறிப்பிடு மூலம் மொபைல் போனில் மின்கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் மின்வாரிய துறையினர் தெரிவித்துள்ளனர்.