இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது.நாடு முழுவதும் தற்போது பல கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் மாணவர்கள் அந்த கல்லூரிகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு நேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அந்த அறிவிப்பில் இந்த கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouiop.samarth.edu/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.