இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!
கர்நாடக மாநிலம் உத்தரகண்டா மாவட்டம் சிஷ்யை சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி. இவர் சைதன்யா பி.யூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது.
மேலும் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.அதன் காரணமாக அவர்களுடைய கற்றல் திறன் பெரிதளவும் பாதிக்கப்பட்டது. பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் மூலம் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டது. அப்போது அனைவருடைய கையிலும் செல்போன்கள் வந்தது அதன் காரணமாக ஒரு சில மாணவர்களின் பாதை மாறத் தொடங்கியது.
இந்நிலையில் செல்போன் கணினி போன்றவற்றால் தத்துரூபமாக பாடம் நடத்தி விட முடியாது. அந்தப் பாடம் கற்பித்ததை மந்தம் ஆக்கிவிடும். அதிலிருந்து மாற்றம் பெறும் நோக்கத்தில் இந்த மனித ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளேன். அந்த ரோபோவின் செயல்திறன் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு தான் தற்போது உள்ளது. கிராம புற மாணவர்களுக்காக அதை உருவாக்கியுள்ளேன் எனக் கூறினார்.
மேலும் இந்த ரோபோவானது மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை தெளிவாக கொடுக்கும் திறன் கொண்டது. குறிப்பாக குழந்தைகளுக்கான கவிதை, பாடல், வாய்ப்பாடு என அனைத்தையும் இந்த ரோபோ சுலபமாக கற்றுக் கொடுக்கும். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என கூறினார்.