இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே வசூல் செய்யும்!
தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்றது.அந்த கோரிக்கையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் ரீடிங் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
குறிப்பாக திமுக தேர்தலின் வாக்குறுதியில் மாதந்தோறும் மின் கட்டணம் ரீடிங் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறபட்டிருந்தது.ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்க வில்லை என கூறுகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.அந்த புதிய சட்டத்தின் மூலமாக மின்சார திருத்த சட்டம் 14 ன் படி மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவுகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் அதனை பொதுமக்கள் செலுத்தும் கட்டணத்துடன் வசூல் செய்யலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்கும் பொழுது ஏற்படும் கூடுதல் செலவு,மின்சாரம் தாயரிப்பதற்கு நிலக்கரி வாங்கும் பொழுது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரி செய்யவும் பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.
மாதந்தோறும் வசூல் செய்ய முடியவில்லை என்றால் ஆண்டுக்கு ஒரு முறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோர் மின் வாரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என் அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வெளியான பிறகு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதில் தற்போது மின்கட்டணம் அதிகமாக உள்ளது என மக்கள் புலம்பி வரும் நேரத்தில் மின் வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் வசூல் செய்யப்படும் என கூறுவது பெரும் சுமை என கூறியுள்ளனர்.