Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்தது.அப்போது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1500 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவும் வகையில் பள்ளிகல்வித்துறை சார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த  இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பயிற்சி இணையவழியில் நடத்தப்பட்டது.சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதி வழங்கி பயிற்சி தரப்பட்டது.

மேலும் கடந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது.இந்நிலையில் அண்மையில் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்க்கான நீட் பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்திருந்தா.ஆனால் அரசு பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Exit mobile version