பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள புதிய நடைமுறை!
நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது.இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகின்றது.இருப்பினும் இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பெரிய அளவில் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சாமிலிக்க முடியாமல் உள்ளது.மேலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்க மாட்டோம் எனவும்,தொடர்ந்து இந்தியாவில் இயங்குவோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் தான் அறிவித்தது.
இந்த நிறுவனம் ரசிகர்களை கவர ஏராளமான முக்கிய திரைப்படங்களை வாங்கியுள்ளது.அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 படத்தை தற்போது வாங்கியுள்ளது.அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சுவான் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 படத்தையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.இதற்கு ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கூறியுள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் பயனர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது என நெட்பிளிக்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் இருந்து 250 கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.