இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!
மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். குறிப்பாக பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சி எருமையை அடியோடு ஒழிக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏழைகளின் நலனை எண்ணி பல திட்டங்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றில்தான் மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பின் அவர்களுக்கு அந்த ஊழியரின் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அமைச்சர் தற்பொழுது தெரிவித்துள்ளார். அந்த வகையில் மத்திய ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்து இந்த உத்தரவை குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சில வங்கிகள் அலைக்கழிப்பதாக ஆக பல புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. சில வங்கிகள், வாரிசுதாரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று பாதுகாவலர் சான்று வாங்கி வந்தால் மட்டுமே இந்த ஓய்வூதியம் தொகை வழங்கப்படும் என்று கூறுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான சான்றிதழ்கள் இந்த ஓய்வுதியம் வாங்குவதற்கு தேவையற்றது என ஓய்வூதியதாரர்களின் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
அதனால் மறைந்த அரசு ஊழியர், எந்த வாரிசுதாரரை ஓய்வூதியம் வாங்குவதற்கு நியமித்துள்ளாரோ அவர்களிடம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என வங்கிகள் அனைத்திற்கும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்கும் படி ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய ஓய்வூதியதாரர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் வங்கிகளில் கேட்கப்படும் பாதுகாவலர் சான்று அவசியமற்றது என தெரிவித்துள்ளனர்.