இனி பிளாஸ்டிக் பை வேண்டாம்!! காகிதப் பை தினத்தின் புதிய நடவடிக்கை!!
பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசூழல்களை மாசடைய செய்கிறது. மேலும் பிளாஸ்டிக் மசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் காகிதப் பைகளை பயன்படுத்துவது குறித்து பல நாடுகள் விழிப்புணர்வை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜூலை 12 ஆம் தேதி அன்று காகிதப் பைகள் தினம் கொண்டாடப்படவுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் காகிதப் பைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் மூலப்பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பைகள் மறுசுழற்சி செய்யக் கூடியதாகவும் மற்றும் மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த புதிய காகிதப் பை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் இந்த காகிதப் பைகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தபடுகிறது.
அமெரிக்கா கண்டுபிடிப்பாளர் 1852 ஆம் ஆண்டு காகிதப் பை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதன் பின் காகிதப் பை பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் காகிதப் பை பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிகரித்தார்கள்.
மேலும் பிளாஸ்டிக் பைகளின் வடிவமைப்பு, உற்பத்தி, விலை மற்றும் விநியோகம் என எளிமையாக பிளாஸ்டிக் பைகள் கிடைத்தது. இதனால் வியாபாரிகள் முதல் பொது மக்கள் வரை அதனை பயன்டுத்தினார்கள். மேலும் அதில் இருக்கும் ஆபத்து உணராமல் அனைவரும் பயன்படுத்தினார்கள்.
இதன் காரணமாக காகிதப் பை உற்பத்தி குறைந்தது. அதன் பின்னர் பிளாஸ்டிக் பையின் அபாயத்தை உணர்ந்து தற்போது காகிதப் பையை தேடி வருகிறார்கள். காகிதப் பை எளிதில் சிதையும் தன்மை கொண்டது மற்றும் வேதியியல் பொருட்கள் அதிகம் இருக்காது.
மேலும் காகிதப் பை சுற்றுசூழலை மாசடைய செய்யாது மற்றும் கடல்வாழ் உயினங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது. மேலும் தமிழக அரசு தற்போது காகிதப் பையை மலிவு விலைக்கு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக காகிதப் பை தினம் அன்று பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று உறுதி எடுப்போம்.