Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகளின் ஆரோக்கியத்தை சிதைக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸ் இனி வேண்டாம்!! இந்த தின்பண்டங்கள் செய்து கொடுங்கள்!!

பெற்றோரர்களுக்கு இருக்கும் பெரிய சவால் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு சாப்பிட வைப்பது தான்.ஆரோக்கியம் இல்லாத பாக்கெட் உணவுகளை ருசித்து சாப்பிடும் குழந்தைகள் ஹெல்தியான உணவுகளை சாப்பிட விருப்பம் காட்டுவதில்லை.இது குழந்தைகளின் தவறு அல்ல பெற்றோர்கள் தவறு தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.சிறு வயதில் இருந்தே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை செய்து கொடுத்து பழக்கினால் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் தின்பண்டங்கள் மீதான நாட்டம் குறைந்துவிடும்.

ஆனால் இன்றைய தலைமுறை பெற்றோர் நேரமின்மையை காரணம் காட்டி கடைகளில் விற்கும் ஆரோக்கியம் இல்லாத தின்பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர்.நீங்கள் வாங்கி கொடுப்பது தின்பண்டங்கள் இல்லை நோய் என்பதை மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் தின்பண்டங்களை ஆரோக்கியம் இல்லாதவையாக கொடுத்தால் எப்படி?

குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்க ஊட்டச்சத்து நிறைந்த தின்பண்டங்களின் பங்கு இன்றியமையாதது.குழந்தைகளுக்கு கொடுக்கும் தின்பண்டங்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஹெல்தி ஸ்னாக்ஸ்:

கேரட்,பீட்ரூட்,குடைமிளகாய் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி தோசை,இட்லி போன்றவற்றில் அழகுபடுத்தி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உலர் விதைகளான பாதாம்,முந்திரி,வேர்க்கடலையை கொரகொரப்பாக அரைத்து தேன் கலந்து உருண்டை பிடித்து ஹெல்தி ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.

வேர்க்கடலையை வறுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சப்பாத்தி அல்லது பூரியில் தடவி கொடுக்கலாம்.வேர்கடலையில் புரதம்,கால்சியம் நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையை வறுத்து பொடித்து பாலில் கலந்து தரலாம்.

பச்சை பயறு உருண்டை,திணை உருண்டை,வேர்க்கடலை உருண்டை,எள் உருண்டை போன்ற ஆரோக்கிய ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம்.பச்சை பயறு,தட்டை பயறு,கருப்பு சுண்டல்,காராமணி,ராஜ்மா,கொள்ளு போன்ற பருப்பு வகைகளை வேகவைத்து தாளித்து கொடுக்கலாம்.வேர்க்கடலையை அவித்து கொடுத்தால் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.

வாழைப்பழம்,ஆப்பிள்,கொய்யா பழம்,மாதுளை போன்ற பழங்களுடன் காய்ச்சி ஆறவைத்த பால் ஊற்றி ஸ்மூத்தியாக அரைத்து இனிப்பு சுவைக்காக தேன் கலந்து ஹெல்தி பானம் கொடுக்கலாம்.

Exit mobile version