மீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!

0
249

மீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!

பெரும்பாலும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரத்தை நாம் தயாரித்து போடும் பொழுது அதற்கு கூடுதல் சத்து கிடைத்து காய்கறிகள் மற்றும் பூக்கள் நன்றாக வளரும்.

அந்த வகையில் பெரும்பாலும் அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே பெரும்பாலும் விரும்புவர். அவர் விரும்புவர்கள் கடைகளில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு வந்தவுடன் வீட்டில் ஒன்று இரண்டு முறை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவக்கூடும்.

இந்த தண்ணீரை எப்பொழுதும் கீழே தான் ஊற்றுவர். அவ்வாறு கீழே ஊற்றாமல் இதனை உரமாக செடிகளுக்கு பயன்படுத்தலாம். மீன் கழுவிய தண்ணீரில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. மீனை வாங்கிக் கொண்டு வந்து முதலில் போடும் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சிறிதளவு வெள்ளம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து என்னுடைய நாட்கள் ஊற விட வேண்டும். இவர் ஊரை விடுவதால் அதில் நுண்ணுயிர்கள் அதிக அளவு பெருகி காணப்படும்.

இவ்வாறு தயாரான உரத்துடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து அதனை வடிகட்டி உங்கள் செடிகளில் ஊற்றி வரலாம்.

காய்கறி பூச்செடி என நாம் இதனை தெளித்து வந்தால் மண்ணின் வளத்தை பெருக்கி அதிக அளவு செடிகளுக்கு சத்துக்களை தரும்.

மேலும் இலைகளில் ஏற்படும் நோய்களும் இதன் மூலம் குணமாகும்.

அதேபோல நீங்கள் கருவேப்பிலை செடி வைத்திருந்தால் மீன் கழுவும் தண்ணீரை அதில் ஊற்றலாம். அவ்வாறு ஊற்றுவதால் உங்கள் செடி நன்றாக வளரும். குறிப்பாக இந்த மீன் கழுவிய தண்ணீரில் செடிகளின் தலைகள் நன்றாக செழித்து வளர உதவும்.

உங்கள் பூச்செடிகள் காய்கறி செடிகள் நன்றாக வளர இந்த மீன் உரத்தை தயார் செய்து போட்ட பிறகு 10 நாட்கள் கழித்து சாதம் வடித்த கஞ்சியை செடிகளில் ஊற்ற வேண்டும்.

இவர் ஊற்றுவதால் காய் மற்றும் பூக்கள் அதிகரித்து கொடுக்கும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு காய் மற்றும் பூ கொடுக்கும்.