இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அவர் அமலாகக் துறையினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இவர் திங்கக்கிழமை நடைபெற்ற மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டதில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டமானது சென்னை அண்ணாச் சாலையிலுள்ள மின்சார வாரியம் அலுவலகத்தில் நடைபெற்றது. இவர் காணொளி காட்சி வாயிலாக தலைமை பொறியாளர்களிடம் மின்சார வாரியம் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மொத்த மின்உற்பத்தி மற்றும் தற்போதைய பயன்பாடு மற்றும் மின் உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் முதல்வர் உத்தரவுப்படி தடையில்லாத மின்சாரத்தை வழங்கவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மின் நுகர்வோர்களின் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யுமாறு கேட்டுகொண்டார்.
சட்டப்பேரவையில் எரிசக்தி துறையின் அறிவிப்பை விளக்கமாக கேட்டறிந்தார். மேலும் அந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் இயக்குநர் போன்ற உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.